அழகாக இருக்க!- 12 வழிகள்!

1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.

12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள்.

பதின்இரண்டு:நள்ளிரவு வரை அவளிடம் / அவனிடம் கதைத்துவிட்டு சென்றாலும், படுக்கையில் அவளையே / அவனையே நினைத்துக்கொண்டிருப்பது.

பதின்ஒன்று:அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.

பத்து:அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.

ஒன்பது:அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.

எட்டு:அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.

ஆறு:அவன் / அவள் உங்களுக்கான அனைத்துமாய் நினைப்பது.

ஐந்து:அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.

நான்கு:அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.

மூன்று:இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது.

இரண்டு:அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது.

ஒன்று:அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

மனைவியை மடக்க உதவும் அந்த 5 வழிகள்

மனைவியை சந்தோஷப்படுத்தாமல், அவளை நிம்மதியாக வைத்துக்கொள்ளாமல் எந்த ஆணாலும் வாழ்க்கையில் உருப்பட முடியும் என்று தெரியவில்லை. இல்லாவிட்டால் நிம்மதியற்ற வாழ்க்கைத்தான் பரிசாகக் கிடைக்கும். இந்த நிலை அதிகரிக்குமானால் நாட்டையும் அது மறைமுகமாக பாதிக்கும்.அதனால் நம் அருகில் இருக்கும், நம்மை நம்பி வாழும் துணைவியை முதலில் திருப்தியாக, சந்தோஷமாக வைத்துக்கொள்வதுதான் ஒவ்வொரு ஆணின் தலையாயக் கடமையாக இருக்க முடியும். அவளின்றி அணுவும் அசையாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.சரி என்ன செய்தால் அவர்களை சந்தோஷமாக்கி, வீட்டை சொர்க்கமாக மாற்றமுடியும்?
அதற்கு 5 வழிகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

1.உன்னிடத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லைஉங்கள் துணையின் பார்வையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டுமா? துணையின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, ‘உன்னிடத்தில் வேறு யாரையும் நினைத்துப்பார்க்க முடியவில்லை’ என்று சொல்லிப் பாருங்கள். போலியாகச் சொன்னால் தெரிந்துவிடும். அவளிடத்தில் வேறு யாரையும் நீங்கள்யோசிக்கவே முடியாது என்ற அர்த்தத்தை இந்த வார்த்தை கொண்டுவரும். ஏன் தெரியுமா? இந்த கணிணி யுகத்தில் நட்பில் தொடங்கி காதலில் முடிய ஏகப்பட்ட வாய்ப்புகள் நிறைந்துக் கிடக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் உச்சரிக்கும் இந்த வார்த்தை, உங்கள் மீதான அன்பை, ஒட்டுதலை அதிகரிக்கும். ‘நான் அவ்வளவு முக்கியமானவளா, இந்தாடா… என்னை அள்ளிக்கோடா’ என்று இழைய வைக்கும்.

2.என் வாழ்க்கையை வெளிச்சமாக்கியவள் நீ என்று நீங்கள் அவளிடம் சொன்னால், இது ரொம்ப ஓவர் என்றாலும், அவள் முகத்தில் ஒரு பெருமிதம் வந்துபோகும். அதை ரசியுங்கள். ஏன் தெரியுமா இதை அடிக்கடி அவளிடம் சொல்ல வேண்டும்? குடும்பம் என்றாலே இரண்டு சக்கரங்கள் கொண்ட வண்டிதானே! துணை என்கிற சக்கரம் இல்லாமல் கையருகில் உள்ள மெழுகுவர்த்தியைக் கூட நம்மால் ஏற்ற முடியாது. பிறகு எப்படி சூரியனை அடைய முடியும். ஆக நம் வாழ்க்கை இருட்டில் சிறுபுள்ளியாக வெளிச்சம் தோன்றினாலும் அதற்கு அவளும்தான் காரணம். அதனால் தான் உண்மையை இந்த வார்த்தையைச் சொல்லி புலப்படுத்தவேண்டும். அதே சமயம் இந்தவார்த்தை அவளுக்கான பாராட்டாகவும் அமையும். மேலும், உங்களுடன் ஒத்துழைத்து மேலும் முன்னேற வழி வகுக்கும். வெளிச்சம் என்ற வார்த்தைக்கு பதிலாக சந்தோஷம், மகிழ்ச்சி என்ற வார்த்தைகளைக்கூட அவ்வப்போது பயன்படுத்தி அவளை சந்தோஷப்படுத்துங்கள் . நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

3.உன் திறமையே திறமை!: அவளுடைய ஒவ்வொரு செயலையும் பாராட்டுங்கள். உன்னைப்போல வருமா என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் இந்த வார்த்தைக்கு முன்னே, பாரத் ரத்னா விருதே கொடுத்தாலும் அதை தூக்கி எறிவார்கள் பெண்கள். அவளை, அவளுடைய வேலைத்திறமையை, பிற செய்கைகளை பாராட்டக் கூட நமக்கு நேரமில்லை என்றால், வார்த்தை வராது என்றால் நமக்கு வாழவே தகுதி இல்லை என்றுதான் அர்த்தம். ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். நம் துணைவியைப் போல நம்மால் அலுக்காமல் சளைக்காமல் அதேசமயம் ருசியாக தொடர்ந்து சமைக்க முடியுமா? அட ஒரு மூணு புள்ளி கோலமாவது ((நீங்கள் பெரிய டிசைனராக, ஓவியராகவே இருந்தாலும்) போட முடியுமா? அவள் அணியும் ஆடை, அணிகலன் எதுவானாலும் அதில் ஒரு அழகிருக்கும். அப்போது தோன்றும் அழகை, அழகான வார்த்தைகளில் அளந்துவிட்டு (பாராட்டுதான்) போங்களேன். அப்புறம் என்ன, உங்களைப்போல வருமா என்று அவள் பாடுவாள்.

4.இதை இதைத்தான் எனக்கு பிடிச்சிருக்கும்: இந்த இதை என்ற இடத்தில் அவளுடைய (நம்மை)பொசுக்கும் அழகிய கண்கள், மென்மையான கால் விரல்கள், சிறுத்த இடை, சீறிப்பாயும் சிரிப்பு, காற்றை விசாரிக்கும் கருங்கூந்தல் என்று எதை வேண்டுமானாலும் போட்டுத் தாக்குங்கள். நீங்கள் அவளை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதை இவ்வார்த்தைகள் அவளுக்கு உணர்த்தும். சும்மா பார்த்துவிட்டுப் போவதை, தொட்டுவிட்டுப் போவதை மட்டும் பெண்கள் அவ்வளவாக ரசிப்பதில்லை. பார்த்ததை, உணர்ந்ததை உங்கள் வாய்மொழியாக கேட்கவும் அவர்களுக்கு ஆசை(அ)த்தான். இதையும் செய்து விட்டால் உங்கள் வாழ்க்கை ஓஹோதான்.

5.உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது: அது எந்த உறவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் சக உறவுகளுக்கு இடையே இந்த வார்த்தைக்கு நிறைய தேவை இருக்கிறது. இதைத்தான் ஒவ்வொரு வரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த வார்த்தை உச்சரிக்கப்படும் இடமெங்கும் ஒற்றுமை பொங்குகிறது. வேலைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சுமுகமாக நடக்கின்றன. வெளியே உள்ள உறவுகளை சரிவர பராமரிக்கவே இவை தேவையென்றால், நம் (மன) அறைக்குள் நம்முடன் இருக்கும் தோழிக்கு சொல்லாவிட்டால் எப்படி? உங்களுக்காக அல்லது குடும்ப முன்னேற்றத்திற்காக அவர் நிச்சயம் உழைப்பார். ஏதாவது பகுதிநேர வேலை பார்ப்பார். உங்களுக்கு ஏற்பட்ட சிறு கடன்களை கஷ்டப்பட்டு அடைப்பார். ஆயுள் காப்பீடு தொகையைக் கட்டியிருப்பார். கூடுதலாக உழைத்து உங்கள் வங்கி சேமிப்புக்கணக்கு அதிகரிக்க செய்திருப்பார் அல்லது உங்கள் முன்னேற்றத்திற்காக அவரும் கடுமையாக உழைத்திருப்பார். அதற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப்படவேண்டும். நீங்கள் பெருமைப்படுவதை மனதிற்குள் வைத்திருக்காமல் அதை, அவர் காதுபட சொல்லி சந்தோஷப்படுத்துங்கள்.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

தராவீஹ் தொழுகையின் சிறப்புகள்

தராவீஹ் தொழுகையின் சிறப்புகளைப் பற்றி கீழ்க்கண்டவாறு பெருமானார் (ஸஸ்) அவர்கள் கூறியதாக அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

1ம் இரவில் தொழுதவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று ஆகிவிடுகிறார்.2ம் இரவில் தொழுதவரின் பாவங்களும் அவரின் பெற்றோர்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.3ம் இரவில் தொழுதவர் அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவமன்னிப்பு கேட்கின்றனர்.4ம் இரவில் தொழுதவருக்கு தவ்ராத், ஜபூர், இன்ஜீல், குர் ஆன் ஓதியதின் நன்மைகள் வழங்கப்படுகின்றன.5ம் இரவில்தொழுதவருக்கு புனித கஃபாவில் புனித மஸ்ஜிதுல் ஆக்ஸாவிலும் தொழுத நன்மைகள் கிடைக்கிறது.

6ம் இரவில் தொழுதவருக்கு பைத்துல் மஃமுரை தவாப் செய்த நன்மை கிடைப்பதுடன் அவருக்கு அனைத்து வஸ்த்துகளும் பிழை பொருக்கத் தேடுகின்றன.7. இரவில் தொழுதவர்களுக்கு நபி முஸா(அலை) அவர்களின் சிறப்புகள் வழங்கப்படுகிறது.8ம் இரவில் தொழுதவர்களுக்கு நபி இபுராஹிம் (அலை) அவர்களுக்கு வழங்கிய உயர்வு வழங்கப்படுகிறது.9ம் இரவில் தொழுதவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இபாதத்து செய்த நன்மைகள் வழங்கப்படுகிறது.10ம் இரவில் தொழுதவர்களுக்கு துன்யா ஆகிரத் இரண்டிலும் நல்ல வசதிகள் வழங்கப்பவுகிறன.அடுத்த 20 அடுத்த பதிவில்

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

பெண்ணுக்கு ரத்தப்பணம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கணவனின் தாம்பத்திய ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை கணவன் பட்டினி போடலாம், பணம் கொடுக்க மறுக்கலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த பெண்கள் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமை குழந்தைகளின் தந்தைக்கும், தாத்தாக்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. பெண்கள் வேலைக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கணவர்களின் அனுமதியை பெறவேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பெண்ணை கற்பழிப்பவர்கள் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்தப்பணம் கொடுத்து விட்டால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவில், திருமணம் செய்து கொண்ட பெண்கள் விருப்பம் இல்லாமலும் கணவன் அவளை கற்பழிக்க முடியும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் ஆகியோர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சட்ட முன்வடிவு கைவிடப்பட்டது. அதுதான் இப்போது இப்படி ஒரு சட்டமாக வடிவம் எடுத்து உள்ளது

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்கள்!

"கல்யாணமான புதுசுல தேன் தடவின மாதிரி இனிக்க, இனிக்க எப்படிப் பேசுவாரு. இப்ப எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறாரு. அதுக்குள்ள நான் அலுத்துப் போயிட்டேன் போலருக்கு" என்று அலுப்பா? இதையெல்லாம் பின்பற்றிப் பாருங்களேன்.பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பியுங்கள்.

உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடிக்கிறாரா? உங்களுக்குத் தெரியாமல் தனது வண்டியில் பெண்களுக்கு லிஃப்ட் தருகிறாரா? அதை யெல்லாம் பெரிது படுத்தாதீர்கள். மன்னித்து, மறந்து விடுங்கள்.ஏதேனும் முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்கிறீர்களா? பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா? சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள்.

அவரைப் பார்த்துப் பொறாமைப்படுங்கள். அதாவது அது ஆரோக் கியமானதாக இருக்கவேண்டும். கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். பைசா பெறாத விஷயத்திற்குக் கூடத்தானே முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பவரா? போகட்டும், விட்டு விடுங்கள். அந்த முடிவு பாதக விளைவுகளைத் தரும் போது நாசுக்காய் சுட்டிக் காட்டுங்கள். உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றை யெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள். உங்கள் உடல், மன நிலைக்கேற்ப அடிக்கடி செக்ஸ் உறவில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

அம்மாவை நேசியுங்கள். உங்கள் அம்மாவை இல்லை. அவரது அம் மாவை. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். பிறகென்ன, மனிதர் உங்களைத் தலையில் வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்.போனால் போன இடம், வந்தால் வந்த இடம் என்று இருப்பவரா உங்களவர்? உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா? ஆளைப்பார்த்தும் ஆத்திரமாகக் கத்தாதீர்கள். ஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக் கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்கிற படி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். மனிதர் தானாக வழிக்கு வருவார். அடுத்த முறை அதே தவறைச் செய்யத் தயங்குவார்.

அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் நன்றாகப் பேசிப் பழகுங்கள். யார் மீதாவது உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்.உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள்.

எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலான ஆண்களுக்குப் பரந் த மனப்பான்மை கிடையாது.கணவன்-மனைவிக்குள் சண்டைகளே இருக்கக் கூடாது என்று நினைக் காதீர்கள். அப்படி சண்டைகளே இல்லாமல் வாழ்வதாகச் சொல்பவர் களையும் நம்பாதீர்கள். சின்னச்சின்ன சண்டைகள் இல்லாத தாம்பத் தியத்தில் சுவாரசியம் இருக்காது.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

ஒரு ____டைரியின் கடைசி பக்கங்கள்

சுற்றிலும் இரும்பு கம்பிகள்.. சிறை, கூண்டு, ,முகாம் என எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்...வெளியே வெறித்த படி பார்த்துக்கொண்டு இருந்தேன்

என்னுடைய இனத்தவரை ஒவ்வருவராக கூட்டிச் செல்கின்றனர்.. இல்லை தூக்கிச் செல்கின்றனர்..பெரிய சுவருக்கு மறைவில் அவர்களை கொண்டு சென்றவுடன் ஒரு சத்தம்..மரண ஓலம் கேட்டதுண்டா நீங்கள்?

முதலில் இருக்கும் சக்தியை எல்லாம் சேர்த்து சத்தம் வரும்.. பிறகு மரணம் நெருங்க நெருங்க அதன் சத்தம் குறைந்து சிறிது நேரத்தில் காணமல் போகும்..மரணத்தை விட கொடுமை ஒன்று உண்டு தெரியுமா??

மரணத்தை எதிர் நோக்கியபடி உள்ளவர்கள் கேட்கும் மற்றவர்களின் மரண ஓலம் தான்..நாளை நாம் சாகும் போது இப்படி தான் ஓலமிடுவோம் என்ற ஒரு எண்ணம் போதும் எல்லா எலும்புகளிலும் சில்லிடும் அந்த குளிர்ச்சி கொடுமையானது ..இதோ என் கண் முன்னே வெட்டப்பட்ட என் இனத்தவர்... துண்டு துண்டாக வெட்டப்பட்டு ... சிறிதும் இறக்கம் இல்லாமல்.. சே.............

எப்போதடா என் முறை வரும் என்று மரணத்தை நேசிக்க மட்டும் தான் முடிகிறது.. அந்த நேசிப்பு மரண பயத்தையும் வென்ற நேசிப்பு...இதோ கூண்டு திறக்கப் படுகிறது.. என் முறை வருகிறது என்று நினைக்கிறேன்..நண்பர்களே முடிந்தவரை என் மரண ஓலத்தை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.. மீறியும் கேட்டால் அது இயற்கையின் கோளாறு..

மீண்டும் சந்.....கோ ...... கோ.. கோக்கோ......கோ.. கோ.. கோ...

.......இது ஒரு ப்ராய்லர் கோழி டைரியின் கடைசி பக்கங்கள்.....

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......



அனைவரும் பிரிண்ட் எடுத்து மனைவியிடம் காட்டவும் .....

திருமணத்திற்கு முன்அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?

அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..

அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..

அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?

அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…

அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?

அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….

அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?

அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…

அவள் : என்னை அடிப்பீர்களா?

அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!

அவள் : நான் உங்களை நம்பலாமா?

அவன் : ம்ம்ம்.

அவள் : அன்பே…!

திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)