மனைவியை சந்தோஷப்படுத்தாமல், அவளை நிம்மதியாக வைத்துக்கொள்ளாமல் எந்த ஆணாலும் வாழ்க்கையில் உருப்பட முடியும் என்று தெரியவில்லை. இல்லாவிட்டால் நிம்மதியற்ற வாழ்க்கைத்தான் பரிசாகக் கிடைக்கும். இந்த நிலை அதிகரிக்குமானால் நாட்டையும் அது மறைமுகமாக பாதிக்கும்.அதனால் நம் அருகில் இருக்கும், நம்மை நம்பி வாழும் துணைவியை முதலில் திருப்தியாக, சந்தோஷமாக வைத்துக்கொள்வதுதான் ஒவ்வொரு ஆணின் தலையாயக் கடமையாக இருக்க முடியும். அவளின்றி அணுவும் அசையாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.சரி என்ன செய்தால் அவர்களை சந்தோஷமாக்கி, வீட்டை சொர்க்கமாக மாற்றமுடியும்?
அதற்கு 5 வழிகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.
1.உன்னிடத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லைஉங்கள் துணையின் பார்வையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டுமா? துணையின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, ‘உன்னிடத்தில் வேறு யாரையும் நினைத்துப்பார்க்க முடியவில்லை’ என்று சொல்லிப் பாருங்கள். போலியாகச் சொன்னால் தெரிந்துவிடும். அவளிடத்தில் வேறு யாரையும் நீங்கள்யோசிக்கவே முடியாது என்ற அர்த்தத்தை இந்த வார்த்தை கொண்டுவரும். ஏன் தெரியுமா? இந்த கணிணி யுகத்தில் நட்பில் தொடங்கி காதலில் முடிய ஏகப்பட்ட வாய்ப்புகள் நிறைந்துக் கிடக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் உச்சரிக்கும் இந்த வார்த்தை, உங்கள் மீதான அன்பை, ஒட்டுதலை அதிகரிக்கும். ‘நான் அவ்வளவு முக்கியமானவளா, இந்தாடா… என்னை அள்ளிக்கோடா’ என்று இழைய வைக்கும்.
2.என் வாழ்க்கையை வெளிச்சமாக்கியவள் நீ என்று நீங்கள் அவளிடம் சொன்னால், இது ரொம்ப ஓவர் என்றாலும், அவள் முகத்தில் ஒரு பெருமிதம் வந்துபோகும். அதை ரசியுங்கள். ஏன் தெரியுமா இதை அடிக்கடி அவளிடம் சொல்ல வேண்டும்? குடும்பம் என்றாலே இரண்டு சக்கரங்கள் கொண்ட வண்டிதானே! துணை என்கிற சக்கரம் இல்லாமல் கையருகில் உள்ள மெழுகுவர்த்தியைக் கூட நம்மால் ஏற்ற முடியாது. பிறகு எப்படி சூரியனை அடைய முடியும். ஆக நம் வாழ்க்கை இருட்டில் சிறுபுள்ளியாக வெளிச்சம் தோன்றினாலும் அதற்கு அவளும்தான் காரணம். அதனால் தான் உண்மையை இந்த வார்த்தையைச் சொல்லி புலப்படுத்தவேண்டும். அதே சமயம் இந்தவார்த்தை அவளுக்கான பாராட்டாகவும் அமையும். மேலும், உங்களுடன் ஒத்துழைத்து மேலும் முன்னேற வழி வகுக்கும். வெளிச்சம் என்ற வார்த்தைக்கு பதிலாக சந்தோஷம், மகிழ்ச்சி என்ற வார்த்தைகளைக்கூட அவ்வப்போது பயன்படுத்தி அவளை சந்தோஷப்படுத்துங்கள் . நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
3.உன் திறமையே திறமை!: அவளுடைய ஒவ்வொரு செயலையும் பாராட்டுங்கள். உன்னைப்போல வருமா என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் இந்த வார்த்தைக்கு முன்னே, பாரத் ரத்னா விருதே கொடுத்தாலும் அதை தூக்கி எறிவார்கள் பெண்கள். அவளை, அவளுடைய வேலைத்திறமையை, பிற செய்கைகளை பாராட்டக் கூட நமக்கு நேரமில்லை என்றால், வார்த்தை வராது என்றால் நமக்கு வாழவே தகுதி இல்லை என்றுதான் அர்த்தம். ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். நம் துணைவியைப் போல நம்மால் அலுக்காமல் சளைக்காமல் அதேசமயம் ருசியாக தொடர்ந்து சமைக்க முடியுமா? அட ஒரு மூணு புள்ளி கோலமாவது ((நீங்கள் பெரிய டிசைனராக, ஓவியராகவே இருந்தாலும்) போட முடியுமா? அவள் அணியும் ஆடை, அணிகலன் எதுவானாலும் அதில் ஒரு அழகிருக்கும். அப்போது தோன்றும் அழகை, அழகான வார்த்தைகளில் அளந்துவிட்டு (பாராட்டுதான்) போங்களேன். அப்புறம் என்ன, உங்களைப்போல வருமா என்று அவள் பாடுவாள்.
4.இதை இதைத்தான் எனக்கு பிடிச்சிருக்கும்: இந்த இதை என்ற இடத்தில் அவளுடைய (நம்மை)பொசுக்கும் அழகிய கண்கள், மென்மையான கால் விரல்கள், சிறுத்த இடை, சீறிப்பாயும் சிரிப்பு, காற்றை விசாரிக்கும் கருங்கூந்தல் என்று எதை வேண்டுமானாலும் போட்டுத் தாக்குங்கள். நீங்கள் அவளை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதை இவ்வார்த்தைகள் அவளுக்கு உணர்த்தும். சும்மா பார்த்துவிட்டுப் போவதை, தொட்டுவிட்டுப் போவதை மட்டும் பெண்கள் அவ்வளவாக ரசிப்பதில்லை. பார்த்ததை, உணர்ந்ததை உங்கள் வாய்மொழியாக கேட்கவும் அவர்களுக்கு ஆசை(அ)த்தான். இதையும் செய்து விட்டால் உங்கள் வாழ்க்கை ஓஹோதான்.
5.உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது: அது எந்த உறவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் சக உறவுகளுக்கு இடையே இந்த வார்த்தைக்கு நிறைய தேவை இருக்கிறது. இதைத்தான் ஒவ்வொரு வரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த வார்த்தை உச்சரிக்கப்படும் இடமெங்கும் ஒற்றுமை பொங்குகிறது. வேலைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சுமுகமாக நடக்கின்றன. வெளியே உள்ள உறவுகளை சரிவர பராமரிக்கவே இவை தேவையென்றால், நம் (மன) அறைக்குள் நம்முடன் இருக்கும் தோழிக்கு சொல்லாவிட்டால் எப்படி? உங்களுக்காக அல்லது குடும்ப முன்னேற்றத்திற்காக அவர் நிச்சயம் உழைப்பார். ஏதாவது பகுதிநேர வேலை பார்ப்பார். உங்களுக்கு ஏற்பட்ட சிறு கடன்களை கஷ்டப்பட்டு அடைப்பார். ஆயுள் காப்பீடு தொகையைக் கட்டியிருப்பார். கூடுதலாக உழைத்து உங்கள் வங்கி சேமிப்புக்கணக்கு அதிகரிக்க செய்திருப்பார் அல்லது உங்கள் முன்னேற்றத்திற்காக அவரும் கடுமையாக உழைத்திருப்பார். அதற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப்படவேண்டும். நீங்கள் பெருமைப்படுவதை மனதிற்குள் வைத்திருக்காமல் அதை, அவர் காதுபட சொல்லி சந்தோஷப்படுத்துங்கள்.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக