தராவீஹ் தொழுகையின் சிறப்புகள்

தராவீஹ் தொழுகையின் சிறப்புகளைப் பற்றி கீழ்க்கண்டவாறு பெருமானார் (ஸஸ்) அவர்கள் கூறியதாக அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

1ம் இரவில் தொழுதவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று ஆகிவிடுகிறார்.2ம் இரவில் தொழுதவரின் பாவங்களும் அவரின் பெற்றோர்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.3ம் இரவில் தொழுதவர் அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவமன்னிப்பு கேட்கின்றனர்.4ம் இரவில் தொழுதவருக்கு தவ்ராத், ஜபூர், இன்ஜீல், குர் ஆன் ஓதியதின் நன்மைகள் வழங்கப்படுகின்றன.5ம் இரவில்தொழுதவருக்கு புனித கஃபாவில் புனித மஸ்ஜிதுல் ஆக்ஸாவிலும் தொழுத நன்மைகள் கிடைக்கிறது.

6ம் இரவில் தொழுதவருக்கு பைத்துல் மஃமுரை தவாப் செய்த நன்மை கிடைப்பதுடன் அவருக்கு அனைத்து வஸ்த்துகளும் பிழை பொருக்கத் தேடுகின்றன.7. இரவில் தொழுதவர்களுக்கு நபி முஸா(அலை) அவர்களின் சிறப்புகள் வழங்கப்படுகிறது.8ம் இரவில் தொழுதவர்களுக்கு நபி இபுராஹிம் (அலை) அவர்களுக்கு வழங்கிய உயர்வு வழங்கப்படுகிறது.9ம் இரவில் தொழுதவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இபாதத்து செய்த நன்மைகள் வழங்கப்படுகிறது.10ம் இரவில் தொழுதவர்களுக்கு துன்யா ஆகிரத் இரண்டிலும் நல்ல வசதிகள் வழங்கப்பவுகிறன.அடுத்த 20 அடுத்த பதிவில்

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக