செய்யாதீங்க! செய்யாதீங்க

சில தினங்களுக்கு முன் ஒரு இளைஞன் தன்னோட மொபைல் போனை தனது இல்லத்தில் சார்ஜ் செய்திருக்கின்றார். அதுசமயம் போனில் அழைப்பு வந்திருக்கிறது. சுவிட்ச்சை ஆப் செய்யாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். பேச ஆரம்பித்த சில வினாடிகளில் செல் போனில் செருகிவைத்திருக்கும் வொயர் வழியாக மின்சாரம் தாக்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் அதி வேகமாக தூக்கி எறியப்பட்டிருக்கிறான். சத்தம் கேட்டு இளைஞனின் பெற்றோர்கள் அறைக்கு ஓடி வந்திருக்கின்றார்கள். அப்போது கைகள் வெந்த நிலையில், ரொம்ப பலகீனமான இதயத்துடிப்புடன் அவர்களின் செல்ல மகன் மயக்க நிலையில் விழுந்து கிடப்பதை பார்த்தனர்.


மயக்க நிலையில் இருந்த இளைஞனை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.ஆனால் அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர். நிலை குலைந்துபோன பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற யாரால் இயலும்?
எது எப்படியோ இப்போது நம்மால் கண்டிப்பாக உணரமுடிகிறது. மொபைல் போனால் உயிரே பறிக்கப் படுகின்றது என்றால், நாமும் கொஞ்சம் உஷாரா இருப்பதில் தவறு இல்லையே?

நான் பெற்ற செய்தி, இதை படித்தவுடன் துடித்துவிட்டேன். ஏனெனில் எனது நண்பர்கள் பலர் இதுபோல் ப்ளக்கை சொருகி விட்டு பேசிக் பார்த்திருக்கிறேன். தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த இடுகையை வெளியிட்டுள்ளேன். இந்த விவரம் முன்பே தெரிந்தவர்கள் உஷாராக இருப்பீர்கள் என்பதில் சிறிதளவும்ஐயமில்லை. விவரம் தெரியாதவர்கள், மேலே உள்ள படத்தினை பார்த்துவிட்டு மிகவும் உஷாராக இருக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com

9999999 என்ற அடையாளத்தோடு

கடைசியில் அந்த அதிசயம் நிகழ்ந்தே விட்டது. கடந்த வாரத்தில் ஒரு முறை வந்துபோன 09/09/2009 ஆம் தேதி காலை 9 மணி 9 நிமிடங்களுக்கு குழந்தை ஒன்றை பெற்று சாதித்து விட்டனர் பெரண்டஸும் அவருடைய மனைவி போலியும். இது அவர்களின் மூன்றாவது குழந்தை.அமெரிக்காவில் உள்ள லா குரூஸ் பகுதியைச் சேர்ந்த பெரண்டாசின் மனைவி போலி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

லாகுரூஸில் உள்ள ஸ்கெம்ப் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போலிக்கு கடந்த புதன்கிழமை அதாவது 9 ஆம் தேதி காலை 9 மணி 9 நிமிடங்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பிக்கப்பட்டது.தன்னுடைய குழந்தையின் பிறந்த தினத்தை மறக்கவே முடியாது என்ற தித்திப்பில் உருகிப்போகிக் கிடந்த பெரண்டஸ் - போலி தம்பதியினருக்கு மற்றொரு மகிழ்ச்சியான ஷாக் செய்தியை கொடுத்தார் செவிலி.அது… அந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 9 அவுன்ஸ் என்பது!
9999999 என்ற அடையாளத்தோடு பிறந்திருக்கும் இந்த குழந்தைக்கு ஹென்றி மைக்கேல் என்று பெயர் வைத்துள்ளனர்.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com

இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌ தேடிய‌ந்திர‌ம்


இண்டெர்நெட் எல்லோருக்குமானது தான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவுமேற்றது.மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படி தான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும்.இண்டெர்நெட்டின் எல்லையில்லா தன்மையும் அதன் வரம்புகளற்ற தன்மையுமே அதன பலபவீனமாக அமைந்து விடுவதுண்டு.எத‌ற்கு இந்த‌ முன்னுறை என்றால் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌ தேடிய‌ந்திர‌ம் ஒன்றை அறிமுக‌ம் செய்ய‌த்தான்.ஐய‌ம்ஹ‌லால் என்னும் பெய‌ரில் அந்த‌ தேடிய‌ந்திர‌ம் அறிமுக‌மாகியுள்ளது.


ட‌ச்சு க‌ம்பெனி ஒன்று இத‌னை உருவாக்கியுள்ள‌து.இண்டெர்நெட்டில் ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளோடு ஆபாடச‌மான‌ ச‌ங்க‌திக‌ளும் உள்ள‌ன‌. உண்மையான‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இத‌னை விரும்பமாட்டார்க‌ள்.அத‌ற்காக‌ இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்த‌ம‌லும் இருக்க‌ முடிய‌து.என்ன‌ க‌வ‌ன‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.எத்த‌னை தான் க‌வ‌ன‌மாக‌ இருந்தாலும் ச‌ம‌ய‌ங்க‌ளில் வேண்டாத‌ த‌க‌வ‌ல்க‌ளும் ஆபாச‌மான‌ ப‌ட‌ங்க‌ளும் எட்டிப்பார்த்து ச‌ங்க‌ட‌த்தை த‌ருவ‌துண்டு.இந்த‌ ச‌ங்க‌ட‌த்தை த‌விர்த்து ந‌ல்ல‌வித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே த‌ருவ‌து தான் ஐய‌ம்ஹலால் தேடிய‌ந்திர‌த்தின் நோக்க‌ம்.இஸ்லாமிய‌ர்க‌ள் த‌வ‌று என்று க‌ருத‌க்கூடிய‌ ப‌த‌ங்க‌ளை த‌விர்த்து விட்டு தேட‌ல் முடிவுக‌ளை இது ப‌டியலிட்டு த‌ருவ‌தாக‌ கூறுகிற‌து.


என‌வே இஸ்லாமிய‌ர்க‌ள் இதில் ச‌ங்க‌ட‌மில்லாம‌ல் தேட‌லாம்.
இது போன்ற‌ த‌னி தேடிய‌ந்திர‌ம் அவ‌சிய‌மா என‌ சில‌ர் நினைக்க‌லாம்.அவ‌ர‌வ‌ர் தேவை ம‌ற்றும் ம‌ன‌நிலையை பொருத்த‌து இது. சிறுவ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ த‌க‌வ‌ல்க‌ளை வ‌டிகட்டும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌ ஒருவ‌ரின் உண‌ர்வு சார்ந்த‌ வ‌டிக‌ட்ட‌லை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் ச‌ரியே.
என் த‌னிப்ப‌ட்ட‌ அனுப‌வ‌த்தை சொல்வதாயின் ப‌ல‌முறை ப‌ணிச‌ர்ந்த‌ புகைப்ப‌ட‌ங‌க்ளை தேடும் போது குறிச்சொற்க‌ளுக்கு ச‌ற்றும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ ஆபாச‌ புகைப்ப‌ட‌ங‌க‌ள் வ‌ந்து நிற்ப‌தை பார்த்திருக்கிறேன். இப்ப‌டி ஆபாச‌ ப‌ட‌ங்க‌ள் வடிகட்டப்பட்டு தேவையான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றுவ‌து ந‌ல்லாது தானே.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com

சதீகும் வடிவேலும் ஸாஹிராவில்


வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா..


பாடம் : முடியல..


பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ..


எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..


அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..


ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..


பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்..


பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்..


என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...


வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது


எக்ஸாம் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு...


அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...


கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்: உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு...


நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com

கணவர்கள் கேட்கும் உரிமைகள்


மாறி வரும் உலகத்தில் கணவர்களாகிய நாம் நம் உரிமைக்குப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது யாரும் மறுக்கமுடியாத உண்மை.மனைவியரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் சில உரிமைகளை நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கிறேன்!


1.கணவர்களாகிய எங்களுக்கு நண்பர்களைச் சந்திக்கும் உரிமை வேண்டும். வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு ஒரு டீயாவது கொடுக்கும் உரிமை வேண்டும்.( நீங்கள் போட வேண்டாம் ..எப்போதும் போல் நாங்களே போட்டுக் கொடுக்கிறோம்!!).

2.வாரம் ஒருமுறையாவது நண்பர்களுடன் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஒரு இரண்டுமணி நேரம் அவர்களுடன் பேச அனுமதி வேண்டும். வாரம் ஒருமுறை என்பது ரொம்ப அதிகமாகத்தெரிகிறதா?..! சரி பரவாயில்லை! மாதம் ஒருமுறையாவது அனுமதி அளிக்க வேண்டும்!!

3.எங்களுடைய சில பொருட்களையாவது வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும். எங்களுடைய புத்தகங்களைப் பழைய பேப்பர்காரனுக்குப் போடும் முன் எங்களிடமும் ஒருவார்த்தை கேட்கலாமே!( ஒரு விண்ணப்பம்தான்!! கோபம் வேண்டாம்......).

4.எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.

5.எங்கள் அலுவலக நண்பர்கள் வரும்போது கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். அந்த நேரத்தில் பாத்திரங்கள்,பொருட்களின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது.( அதான் அவர்களை அனுப்பிவிட்டு நாங்கள் வந்தவுடன் உங்கள் வன்முறையை வழக்கம்போல் எங்கள் மீது.......................இஃகி..இஃகி).

6.எங்கள் நண்பர்கள் வரும்போது சமைக்கவோ, தண்ணீர் பிடித்துவரவோ, புடவை அயர்ன் பண்ணவோ சொல்லக்கூடாது.( அந்த வேலைகளை அவர்கள் வரும் முன்னாடியே செய்து வைக்க அனுமதி வேண்டும்).

7.மாத செல்போன் அலவன்ஸ் 100 ரூபாய் கூட்டித்தரவேண்டும். பாதி மாதத்தில் டாக்டைம் முடிந்து போய் ரிசீவ்ட் கால் மட்டும் வைத்து ஓட்டுவது பெருங்கஷ்டமாக உள்ளது.


8.பொது இடங்களிலாவது "கணவர்" என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.


9.வெளியில் போகும் போது நீங்கள் பூசிய பின் கொஞ்சமாவது எங்களுக்கும் வாசனை பதார்த்தங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்( நிபந்தனைகள். விதித்தாலும்பரவாயில்லை.)


10.பிள்ளைகளுக்கு முன் வைத்து நீங்கள் தருகின்ற தண்டனைகளை குறைத்து மறைவான இடங்களில் தண்டனைகளை வழங்க வேண்டும்.
11. இருவருக்கும் உள்ள பிரச்சணையை குடும்பப்பெரியவர்களிடம் சொல்லாமல் கணவனின் உற்ற நண்பன் அல்லது மேலதிகாரியின் மனைவிடம் போய் சொல்லி பஞ்சாயத்துக்கூட்டி தனக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்(அந்த பண்ணாடைகளும் அடுத்தவன் பெண்டாட்டிகளுக்கு சாதகமாகவே தீர்ப்பு சொல்லாமலிருக்கவேண்டும்!)
12.மனத்தாங்கலை வெளிப்படுத்த இருவரும் கட்டாயமாக இணைந்து செல்லவேண்டிய வீஷேசங்களின் போது ”எனக்கு வயிறு வலிக்குது, ஃபீரியட்ஸ் பெயின்னு நிணைக்கிறேன்” என்று முகத்தை கோணி மாதிரி கோனி, அழுவுனி ஆட்டம் ஆடி, நாங்க போறதையும் கெடுத்து; பிற்பாடு ஏதாவது ஹோட்டல்ல டோர் டெலிவரி ஆர்டர் செய்து நல்ல ரவுண்டு கட்டிட்டு “ஹே, வலி சரியாப்போச்சுப்பா!” என்று புருஷனை கோயானாக்குவதை நிறுத்த வேண்டும்!
கண்டி மாநகர மடவலை பெண்கள் சமூகம் இதைக் கருணை கூர்ந்து பரிசீலனை செய்யவும்.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com