
மாறி வரும் உலகத்தில் கணவர்களாகிய நாம் நம் உரிமைக்குப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது யாரும் மறுக்கமுடியாத உண்மை.மனைவியரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் சில உரிமைகளை நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கிறேன்!
1.கணவர்களாகிய எங்களுக்கு நண்பர்களைச் சந்திக்கும் உரிமை வேண்டும். வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு ஒரு டீயாவது கொடுக்கும் உரிமை வேண்டும்.( நீங்கள் போட வேண்டாம் ..எப்போதும் போல் நாங்களே போட்டுக் கொடுக்கிறோம்!!).
2.வாரம் ஒருமுறையாவது நண்பர்களுடன் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஒரு இரண்டுமணி நேரம் அவர்களுடன் பேச அனுமதி வேண்டும். வாரம் ஒருமுறை என்பது ரொம்ப அதிகமாகத்தெரிகிறதா?..! சரி பரவாயில்லை! மாதம் ஒருமுறையாவது அனுமதி அளிக்க வேண்டும்!!
3.எங்களுடைய சில பொருட்களையாவது வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும். எங்களுடைய புத்தகங்களைப் பழைய பேப்பர்காரனுக்குப் போடும் முன் எங்களிடமும் ஒருவார்த்தை கேட்கலாமே!( ஒரு விண்ணப்பம்தான்!! கோபம் வேண்டாம்......).
4.எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.
5.எங்கள் அலுவலக நண்பர்கள் வரும்போது கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். அந்த நேரத்தில் பாத்திரங்கள்,பொருட்களின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது.( அதான் அவர்களை அனுப்பிவிட்டு நாங்கள் வந்தவுடன் உங்கள் வன்முறையை வழக்கம்போல் எங்கள் மீது.......................இஃகி..இஃகி).
6.எங்கள் நண்பர்கள் வரும்போது சமைக்கவோ, தண்ணீர் பிடித்துவரவோ, புடவை அயர்ன் பண்ணவோ சொல்லக்கூடாது.( அந்த வேலைகளை அவர்கள் வரும் முன்னாடியே செய்து வைக்க அனுமதி வேண்டும்).
7.மாத செல்போன் அலவன்ஸ் 100 ரூபாய் கூட்டித்தரவேண்டும். பாதி மாதத்தில் டாக்டைம் முடிந்து போய் ரிசீவ்ட் கால் மட்டும் வைத்து ஓட்டுவது பெருங்கஷ்டமாக உள்ளது.
8.பொது இடங்களிலாவது "கணவர்" என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
9.வெளியில் போகும் போது நீங்கள் பூசிய பின் கொஞ்சமாவது எங்களுக்கும் வாசனை பதார்த்தங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்( நிபந்தனைகள். விதித்தாலும்பரவாயில்லை.)
10.பிள்ளைகளுக்கு முன் வைத்து நீங்கள் தருகின்ற தண்டனைகளை குறைத்து மறைவான இடங்களில் தண்டனைகளை வழங்க வேண்டும்.
11. இருவருக்கும் உள்ள பிரச்சணையை குடும்பப்பெரியவர்களிடம் சொல்லாமல் கணவனின் உற்ற நண்பன் அல்லது மேலதிகாரியின் மனைவிடம் போய் சொல்லி பஞ்சாயத்துக்கூட்டி தனக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்(அந்த பண்ணாடைகளும் அடுத்தவன் பெண்டாட்டிகளுக்கு சாதகமாகவே தீர்ப்பு சொல்லாமலிருக்கவேண்டும்!)
12.மனத்தாங்கலை வெளிப்படுத்த இருவரும் கட்டாயமாக இணைந்து செல்லவேண்டிய வீஷேசங்களின் போது ”எனக்கு வயிறு வலிக்குது, ஃபீரியட்ஸ் பெயின்னு நிணைக்கிறேன்” என்று முகத்தை கோணி மாதிரி கோனி, அழுவுனி ஆட்டம் ஆடி, நாங்க போறதையும் கெடுத்து; பிற்பாடு ஏதாவது ஹோட்டல்ல டோர் டெலிவரி ஆர்டர் செய்து நல்ல ரவுண்டு கட்டிட்டு “ஹே, வலி சரியாப்போச்சுப்பா!” என்று புருஷனை கோயானாக்குவதை நிறுத்த வேண்டும்!
கண்டி மாநகர மடவலை பெண்கள் சமூகம் இதைக் கருணை கூர்ந்து பரிசீலனை செய்யவும்.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com
www.djhillal.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக