கவிதை

இரவின் நிசப்தத்தில்
விழிகள் மூட மறுத்ததால்
எழுதத் துடிக்கிறது
எந்தன் பேனா

கவி ஒன்று வரும் என்று
கைகள் கிறுக்கிய போது
எழுதப்பட்டது எல்லாம்
உந்தன் பெயர் மட்டுமே

வெண்ணிலவையும்
மின்னும் நட்சத்திரங்களையும்
பரந்து விரிந்த கறுத்த வானத்தையும்
பார்த்தபடி காத்திருக்கிறேன்
உந்தன் வருகைக்காக

அன்புடன் இவன்
ஹிலால்

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com

கோடையிலும் குளுகுளு

மழைக்காலமும் பனிக்காலமும் நமக்கு சுகமானவை… ஏன், வேர்வைக் கசகசப்பு இருக்காது அதுதான் காரணம்.ஆனால் ஜப்பானியர்கள் வேர்வைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை எல்லாக் காலமும் நல்ல காலமே. அதேசமயம் உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கமும் அவர்களுக்குக் கிடையாது. ஆனால் வேர்வைச் சிந்தாமல் உழைப்பது எப்படி என்று யோசிப்பவர்கள் அவர்கள். ஏற்கனவே அங்கே குளிர்பதன ஆடைகள் புழக்கத்தில் உள்ளன என்றாலும் இப்போது தொடங்கியிருக்கும் கோடை காலத்திற்காக உடலை சில்லென வைத்திருக்கும் வழிமுறைகளில் புதிய உத்திகளை புகுத்தியிருக்கிறார்கள்.



குளிர்பதன ஆடைகளை, தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது அங்கே. இந்த குளிர்பதன ஆடைகள் உஷ்ணனத்தை வெளியேற்றும் சக்தி கொண்ட துணிகளால், பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆடையில் பொருத்தப்பட்டுள்ள சின்ன விசிறி உடல் மீது வெளிக்காற்றை விசிறி அடித்தபடியே இருக்கும் அக்காற்று உடல் வேர்வையை சீக்கிரம் காய வைப்பதுடன், மனித உடலின் சராசரி வெப்பநிலையையும் தக்க வைக்க உதவுகிறது. இந்த விசிறி சுழலும் வேகத்தை கூட்ட குறைக்கவும் இதில் வசதி உள்ளது.கோடை கால வெப்பம் பகலில் வேலை செய்யும் திறனைக் குறைக்கும் என்றால் இரவில் வீசும் அனல் தூக்கத்தை துரத்தி, அடுத்த நாள்வேலையையும் கெடுக்க ஏதுவாகிவிடும். அதற்கும் வழி கண்டுபிடித்து விட்டார்கள் ஜப்பானில். அதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது படுக்கை ஒன்று. இந்தப் படுக்கை மீது விரிக்கப்படும் பாயில்தான் விஷயமே. இந்தப் பாயில் மெல்லிய பிளாஸ்டிக் மெஸ்கள் நீளவாக்கில் ஒன்றன் கீழ் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ்ப்பகுதியில் காற்றை இழுக்கும் வகையில் சின்ன விசிறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசிறியானது படுக்கையில் அந்த முனையில் இருந்து காற்றை இழுத்துக்கொண்டு இருக்கிறது. கோடைகாலத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை, படுத்துறங்குவதை இக் குளிர்பதன படுக்கை (வேர்வை கசகசப்பு இல்லாமல்) கூல் ஆக்கிறது.


மேலும் கோடைகாலத்தில், வேர்வைக் காரணமாக நம் உள்ளாடைகள் சீக்கிரமே ‘கமகம’க்கத் தொடங்கிவிடும். அதற்கும் விடை தேடி ஆராய்ந்த ஜப்பானியர்கள் வேர்வைக் கசகசப்பிலும் துர்நாற்றம் வீசாத உள்ளாடைகளை உருவாக்கி இருக்கிறார்கள். மருத்துவத் துறைக்காக உருவாக்கப்பட்ட இந்த புதிய துணித் தொழிலநுட்பம் இப்போது அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் செய்யப்பட்டிருக்கிறது.. உள்ளாடைகள் தயாரிக்கப்படும் துணி இழைகளில் போரோசஸ் செராமிக்கும் சேர்க்கப்படுகிறது. இது வேர்வையில் உள்ள துர்நாற்றம் வீசும் உட்பொருளை சிதைத்து துர்நாற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. அதேப்போல் நானோடெக்னாலஜி முறையில் உள்ளாடைத் துணிகளின் இழைகள் இணையும் விகிதாச்சாரத்தையும் மாற்றி அமைத்து வேர்வை துர்நாற்றம் வராமல் செய்திருக்கிறார்கள்.


இந்த புதிய துணித் தொழில்நுட்பத்தை உள்ளாடைகளில் மட்டுமின்றிநாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான கர்ச்சீப், பைகள், சாதாரணமாக அணியும் டீசர்ட்டுகள் போன்றவற்றிலும் கொண்டு வர உள்ளனர் ஜப்பானின் ஆடை தயாரிப்பாளர்கள். ஆடையில் ஏற்பட்டிருக்கும் இந்த புரட்சியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என்பது கூடுதல் சிறப்பு.

NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com

அசாதாரண குழந்தை அக்பர்!


அக்பர் ரிஷுதீன்…. அரபி மொழியில் மிகச் சிறந்தவன் என்று பொருள். பெயருக்கு ஏற்ப வெயிட்டாகப் பிறந்திருக்கிறான் அக்பர்.சுனாமி சுழன்றடித்துத் தாக்கும் இந்தோனேசியாவின் வட சுமத்ரா தீவில் கடந்த 21 ஆம் தேதி, திங்கள்கிழமை அன்று ஆனி என்ற தாய்க்குப் பிறந்த அக்பர் பிறக்கும்போதே 8.7 கிலோ எடை இருந்திருக்கிறான். மற்றக் குழந்தைகளிடையே அவன் உறங்கும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது. இரண்டு அடிநீளமிருக்கும் அக்பர் சிசேரியன் மூலம் பிறப்பிக்கப்பட்டான்.

இந்தோனேசியாவில் இதுவரை பிறந்த குழந்தைகளில் எடை மிகுந்த குழந்தை என்ற சாதனையை அக்பர் புரிந்திருக்கிறான். உலகளவில் எடுத்துக்கொண்டால் 1879 இல், அமெரிக்காவில் பிறந்து உடனே இறந்துவிட்ட ஒரு குழந்தையின் எடை 10.43 கிலோ.அக்பர் அசாதாரண குழந்தை என்பதால் சிசேரியன்கூட கொஞ்சம் சிக்கலாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அம்மா ஆனியின் கர்ப்பப்பையில் இருந்து அக்பரை எடுப்பதற்குள் மூச்சு வாங்கியிருக்கிறது மருத்துவர்களுக்கு. ஆனாலும் பிறக்கும்போதே சாதனையுடன் பிறந்துவிட்டான் அக்பர்.பிறந்த சமயத்தில் மூச்சு வாங்க சிரமப்பட்டதால் அக்பருக்கு ஆக்சிஜன் தரப்பட்டிருக்கிறது. மற்றபடி தற்போது அவன் சேமமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அக்பரின் அம்மா ஆனிக்கு 41 வயது. . அக்பர் அவருக்கு நான்காவது குழந்தை. மருத்துவமனையில் பிறக்கும் முதல் குழந்தையும் அக்பர்தான். பிரசவத்தில் சிக்கல் ஏற்படாமல் இருந்திருந்தால் இவனும் வீட்டில்தான் பிறந்திருப்பான்
அக்பர் இருக்கும் எடைக்கு அவன் அருந்தும் பாலும் அதிகமாக இருக்கிறது. அம்மா ஆனி நீரிழிவு நோயாளி வேறு. சர்க்கரை அளவும் உச்சஸ்தாயியில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாயின் மார்பே கதி என்று அவன் கிடப்பதால், அவனுக்குள் க்ளுகோசின் அளவு அதிகரித்து அவன் இன்னும் அதிக குண்டடிக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அம்மா ஆனியின் கைகளில் பரந்து விரிந்து படுத்திருக்கும் அக்பர் அழுதால் சிங்கக்குட்டி உறுமுவதுபோல் இருக்கிறதாம். சாதாரண குழந்தை (ஊரையே எழுப்பிவிடும் அளவுக்கு) கத்தினாலே தாங்க முடியாது. உண்மையில் சிங்கக்குட்டி அளவுக்குப் பிறந்திருக்கும் அக்பர் அழுதால் அப்படித்தான் இருக்கும்.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com