மழைக்காலமும் பனிக்காலமும் நமக்கு சுகமானவை… ஏன், வேர்வைக் கசகசப்பு இருக்காது அதுதான் காரணம்.ஆனால் ஜப்பானியர்கள் வேர்வைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை எல்லாக் காலமும் நல்ல காலமே. அதேசமயம் உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கமும் அவர்களுக்குக் கிடையாது. ஆனால் வேர்வைச் சிந்தாமல் உழைப்பது எப்படி என்று யோசிப்பவர்கள் அவர்கள். ஏற்கனவே அங்கே குளிர்பதன ஆடைகள் புழக்கத்தில் உள்ளன என்றாலும் இப்போது தொடங்கியிருக்கும் கோடை காலத்திற்காக உடலை சில்லென வைத்திருக்கும் வழிமுறைகளில் புதிய உத்திகளை புகுத்தியிருக்கிறார்கள்.
குளிர்பதன ஆடைகளை, தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது அங்கே. இந்த குளிர்பதன ஆடைகள் உஷ்ணனத்தை வெளியேற்றும் சக்தி கொண்ட துணிகளால், பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆடையில் பொருத்தப்பட்டுள்ள சின்ன விசிறி உடல் மீது வெளிக்காற்றை விசிறி அடித்தபடியே இருக்கும் அக்காற்று உடல் வேர்வையை சீக்கிரம் காய வைப்பதுடன், மனித உடலின் சராசரி வெப்பநிலையையும் தக்க வைக்க உதவுகிறது. இந்த விசிறி சுழலும் வேகத்தை கூட்ட குறைக்கவும் இதில் வசதி உள்ளது.
கோடை கால வெப்பம் பகலில் வேலை செய்யும் திறனைக் குறைக்கும் என்றால் இரவில் வீசும் அனல் தூக்கத்தை துரத்தி, அடுத்த நாள்வேலையையும் கெடுக்க ஏதுவாகிவிடும். அதற்கும் வழி கண்டுபிடித்து விட்டார்கள் ஜப்பானில். அதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது படுக்கை ஒன்று. இந்தப் படுக்கை மீது விரிக்கப்படும் பாயில்தான் விஷயமே. இந்தப் பாயில் மெல்லிய பிளாஸ்டிக் மெஸ்கள் நீளவாக்கில் ஒன்றன் கீழ் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ்ப்பகுதியில் காற்றை இழுக்கும் வகையில் சின்ன விசிறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசிறியானது படுக்கையில் அந்த முனையில் இருந்து காற்றை இழுத்துக்கொண்டு இருக்கிறது. கோடைகாலத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை, படுத்துறங்குவதை இக் குளிர்பதன படுக்கை (வேர்வை கசகசப்பு இல்லாமல்) கூல் ஆக்கிறது.மேலும் கோடைகாலத்தில், வேர்வைக் காரணமாக நம் உள்ளாடைகள் சீக்கிரமே ‘கமகம’க்கத் தொடங்கிவிடும். அதற்கும் விடை தேடி ஆராய்ந்த ஜப்பானியர்கள் வேர்வைக் கசகசப்பிலும் துர்நாற்றம் வீசாத உள்ளாடைகளை உருவாக்கி இருக்கிறார்கள். மருத்துவத் துறைக்காக உருவாக்கப்பட்ட இந்த புதிய துணித் தொழிலநுட்பம் இப்போது அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் செய்யப்பட்டிருக்கிறது.. உள்ளாடைகள் தயாரிக்கப்படும் துணி இழைகளில் போரோசஸ் செராமிக்கும் சேர்க்கப்படுகிறது. இது வேர்வையில் உள்ள துர்நாற்றம் வீசும் உட்பொருளை சிதைத்து துர்நாற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. அதேப்போல் நானோடெக்னாலஜி முறையில் உள்ளாடைத் துணிகளின் இழைகள் இணையும் விகிதாச்சாரத்தையும் மாற்றி அமைத்து வேர்வை துர்நாற்றம் வராமல் செய்திருக்கிறார்கள்.
இந்த புதிய துணித் தொழில்நுட்பத்தை உள்ளாடைகளில் மட்டுமின்றிநாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான கர்ச்சீப், பைகள், சாதாரணமாக அணியும் டீசர்ட்டுகள் போன்றவற்றிலும் கொண்டு வர உள்ளனர் ஜப்பானின் ஆடை தயாரிப்பாளர்கள். ஆடையில் ஏற்பட்டிருக்கும் இந்த புரட்சியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என்பது கூடுதல் சிறப்பு.
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)
www.djhillal.blogspot.com
www.djhillal.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக