முதலிரவு அறை. அடர்த்தியாக குளிர் பரவியிருந்தது. பூக்கள் கிறக்கமூட்டின. ஒரு ராட்சத மெத்தை முதல் காட்சிக்கு தயாராய் இருந்தது. அந்த அறை மேல் நாட்டு தொழில் நுட்பத்தில் உள்ளே குண்டு வெடித்தாலும் வெளியில் கேட்காத அளவுக்கு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது
ஆனந்த் ஆவலோடு காத்திருந்தான். தன் புது மனைவியை எதிர்பார்த்து. அவன் கற்பனை வான் அளவுக்கு உயர்ந்திருந்தது. அவள் வர தாமதித்தாள். அவனுக்கு எதிர்பார்த்து காத்திருப்பது வெறுப்பாக இருந்தது. அவன் ஆசை சுரப்பிகள் அவள் அழகு மழைக்காக காய்ந்திருந்தன
உடை மாற்றி அலங்காரம் பண்ணிக்கொண்டு வெகு நேரம் கழித்து அவள் அந்த அறைக்கு இரண்டாவது முறையாக புறப்பட்டாள். ஒரு அசையும் பொம்மைபோல. தலை குனிந்து. அவள் சேலை கூட வெட்கப்பட்டது. கையில் ஒரு கண்ணாடி டம்பள்ரில் பால் வைத்திருந்தாள். முதல் முறை அந்த அறைக்குள் எதற்கு போனோம் என்பதை நினைத்தபோது உடல் குலுங்கியது. சுதாரித்துக்கொண்டாள். சாற்றியிருந்த கதவை மெல்ல விலக்கினாள். உள்ளே தரையில் ஆனந்த் படுத்திருந்தான். பிணமாய். அவன் தலையிலிருந்து ரெத்தம் வழிந்து அவன் தலைக்கு மேல் ஒரு அடிக்கு தரையில் படர்ந்திருந்தது

அவன் கையில் ஒரு துப்பாக்கி திணிக்கப்பட்டிருந்தது. சுவற்றில் புள்ளட் ஒன்று சீறி பாய்ந்த தடம் தெரிந்தது.
ஓவென்று காது பொத்தி கதறினாள். அவள் கொண்டு வந்த பால் டம்ப்ளர் அந்த அறை வாசலில் விழுந்து நொறுங்கியது. பால் வழிந்து ரெத்ததோடு கலந்து சைவ பால் அசைவமாகிக் கொண்டிருந்தது.அவள் அலறியது அந்த வீடு முழுவது எதிரொலித்தது. அந்த பங்க்ளாவின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து ஓடி வந்தனர். அவள் ஓங்கி அழுதவாறு சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள். ஒவ்வொருவராய் வெளியிலிருந்து உள்ளே எட்டி பார்த்தனர். எவரும் உள்ளே பிரவேசிக்கவில்லை. அவனது அம்மா உள்ளே போக முற்பட்டாள். அவளை சிலர் சமாதானப்படுத்தி இழுத்துக்கொண்டு போனார்கள். சிலிர் உள்ளே பார்க்க பயந்து என்ன என்ன என்று விசாரித்து கிசு கிசுத்தனர்
ஒருவர் போலீசுக்கு தகவல் சொன்னார். அந்த தெருவையே எழுப்பியது அந்த போலீஸ் சைரன். எல்லோரும் புது மாப்பிள்ளை முதலிரவு அறையில் தற்கொலை செய்து கொண்டதை ஆச்சரியம் கலந்த பயத்தோடு பேசிக்கொண்டார்கள். போலீஸ் வந்து வித விதமாய் புகை படமெடுத்தார்கள். படம் வரைந்தார்கள். அவனுடைய அப்பாவோடு தனியாக ஏதோ பேசிக்கொண்டார்கள். ஒரே ஒரு புல்லட் அந்த கல்யாண வீட்டை சாவு வீடாக மாற்றியிருந்தது. யாரும் வாய் விட்டு அழவில்லை. அழுவதை ஏதோ ஈகோ தடுத்தது. நந்தினி மட்டும் ஓயாமல் அழுதுகொண்டிருந்தாள். போலீஸ் அவளையும் விசாரித்தது. "நான் பால் டம்பள்ரோடு உள்ளே வந்து பார்த்து அவர்……" என்று வாய் பொத்தி மறுபடியும் அழுதாள்.
போலீஸ் வெவ்வேறு கோணத்தில் விசாரணை நடத்தியது. அதை தற்கொலை என ஆழமாய் நம்பியது.
"கன்பார்ம் சூசைடு தான். உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"
" இல்லை "என்றார் ஆனந்தின் அப்பா
"சார் போஸ்மார்டன் முடிந்து நாளைக்கு காலையில பாடிய எடுத்துறலாம் எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க" என்றார் இன்ஸ்பெக்டர். அடுத்த நாள் பத்திரிகைகளுக்கு தொழிலதிபர் மகன் ஆனந்த் முதலிரவு அறையில் தற்கொலை என சூடாக செய்தி போய் சேர்ந்திருந்தது. அது தற்கொலை என எல்லோரும் நம்பியதில் நந்தினி உள்ளுக்குள் ஆர்பரித்தாள்
"கன்பார்ம் சூசைடு தான். உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"
" இல்லை "என்றார் ஆனந்தின் அப்பா
"சார் போஸ்மார்டன் முடிந்து நாளைக்கு காலையில பாடிய எடுத்துறலாம் எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க" என்றார் இன்ஸ்பெக்டர். அடுத்த நாள் பத்திரிகைகளுக்கு தொழிலதிபர் மகன் ஆனந்த் முதலிரவு அறையில் தற்கொலை என சூடாக செய்தி போய் சேர்ந்திருந்தது. அது தற்கொலை என எல்லோரும் நம்பியதில் நந்தினி உள்ளுக்குள் ஆர்பரித்தாள்
"எத்தனை அட்டூழியம். எல்லாம் பணம் இருக்கும் திமிர் தானே. இவனை கொன்றதில் என்ன தவறு .என்னை ரமேஷ் உயிருக்கு உயிராய் காதலித்தான். ஒரு நாள் இதோ மூளை சிதறி இறந்து கிடக்கிறானே இந்த பணக்கார நாய் தன் காரில் வந்து என் மீது மோதினான். மோதிய மாத்திரத்தில் என் மீது மோகம் வந்ததாம். எத்தனை அதிகாரம் செய்தான். என் வீட்டில் இருப்பவர்களை மிரட்டி...என் காதலனின் வீட்டாரை ஊரை விட்டே விரட்டி...பயந்தோடச்செய்து....என் அப்பாவை பணத்தால் மயக்கி ஒரு கூண்டுக்கிளியாய் முகூர்த்த நேரம் பார்த்து சிறை பிடித்தானே....இதோ அவன் ஆணவம் ரெத்தமாய் உருகி வெளியேறிக்கொண்டிருக்கிறது
"இதோ நான் போகப்போகிறேன். ரமேஷ் எனக்காக ஏதாவது ஒரு ஊரில் காத்திருப்பான். தாடி வளர்த்திருப்பான். சரியாக சாப்பிடாமல் இருப்பான். குடிக்க தொடங்கியிருப்பானோ? அவனை காப்பாற்ற வேண்டும். அவனிடம் உரக்க சொல்ல வேண்டும் உன்னை என்னிடமிருந்து பிரித்தவன் மடிந்துவிட்டான். உன் தெய்வீக காதலை அணு அணுவாய் கொன்றவன் அழிந்துவிட்டானென்று. என்னை சிறை பிடித்தவன் கை விரல் கூட உனக்காக வளர்த்த இந்த தேகத்தை தீண்டியிருக்கவில்லை. அந்த மிருகத்திடமிருந்து என்னை நான் காப்பாற்றி வைத்திருக்கிறேன் உனக்காக. ரமேஷை தேடி கண்டுபிடிப்பேன். உலகில் ஏதோ ஒரு மூலையில் எனக்காக உருகி உருகி இந்த இரவில் அழுது கொண்டிருப்பானே அவனை தேடிப்போக வேண்டும். அவன் என்னை ஏற்றுக்கொள்வான். இவனை கொன்றுவிட்டதாக சொன்னால் என்னை தூக்கி கொண்டாடுவான். அவன் முதல் முதலில் பரிசாய் கொடுத்த மோதிரம் கை விரல்களில் அவன் நினைவுகள் போல் இறுகியிருந்தது."
அடுத்த நாள் அவளின் ஒரு நாள் கணவனின் உடலை ஆம்புலன்சில் கொண்டு வந்தார்கள். நடு ஹாளில் அந்த கண்ணாடி பெட்டியில் அவன் உடல் வெள்ளை துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. நந்தினி மெல்ல வந்து அதன் அருகில் அமர்ந்தாள். உள்ளுக்குள் பழி தீர்த்த சந்தோஷம். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதென்பதற்காய் அழுதாள். எல்லோரும் இவளை பரிதாபமாய் பார்த்தார்கள். அவளது மனம் ரமேஷை தேடி எப்போது எப்படி எங்கே போவதென்பதையே சிந்தித்துக்கொண்டிருந்தது . ஒவ்வொருவராய் வந்து மலர் வளையம் வைத்தார்கள். தலை குனிந்து அழுதாள். அழுவதாய் நடித்துக்கொண்டிருந்தாள். நீண்ட வரிசையில் ஆட்கள் மாலையோடு காத்திருந்தார்கள்.
திடீரென கூட்டம் விலகி யாருக்கோ வழிவிட்டது. நந்தினி தலை உயர்த்தி பார்த்தாள். ரமேஷ். அவன் கையில் ஒரு மலர் வளையம் வைத்திருந்தான். அவன் பின்னால் ஒட்டியபடி ஒரு பெண் வந்தாள். அவள் கழுத்தில் தாலி இருந்தது . அவன் மௌனமாய் வந்து கண்ணாடி பெட்டியின் மீது மலர் வளையம் வைத்தான். அவன் பின்னால் வந்த பெண் "அண்ணா என்ன விட்டு போயிட்டியே" என அந்த கண்ணாடி பெட்டியில் இடித்து அழுதாள். ரமேஷ் நந்தினியை ஒரு முறை பார்த்தான். அந்த பார்வை "உன்னை விட்டுக்கொடுத்து தான் இவன் பணக்கார தங்கையை வாங்கினேன்" என்றது. அவளது கணவன் தான் இறந்ததற்கான காரணம் தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தான்
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக