போன் பண்ணா தொல்ல..

ஏன் தெரியுமா 10 வயசுக்குள்ளாற குழந்தைகள் இருக்குற நண்பர்கள் வீட்டுக்கு போன் பண்ணக்கூடாது? அந்த கொடுமைய சொல்றேன் கேளுங்க..
நான் சமீபத்துல, என் நண்பிக்கு போன் செஞ்சியிருந்தேன். அவங்க பிரசவம் முடிஞ்சி கொஞ்சம் பிஸியாகிட்டதால, 1 வருஷத்துக்கு மேல அவங்ககிட்ட பேச முடியலை. திடீர்னு ஞாபகம் வந்த மாதிரி ஒரு நாள் 'தவரிய அழைப்பு' குடுத்தாங்க! (அப்படியெல்லாம் நெனைக்கப்படாது...மிஸ்டு கால் தமிழாக்கம்தான் அது!). சரின்னு.. நானும் என்னமோ, ஏதோன்னு போனை போட்டங்க... வழக்கம்போல நலம் விசாரிச்சிட்டு, தெரியாத தானமா ஒன்னு கேட்டுடங்க.. என்னான்னா? அந்த டயலாக் டெலிவரிங்களை நீங்களே கீழ படிங்க

நானு : அப்புறம்.. உன் பையன் எப்டி இருக்கான்? என்ன, அவனுக்கு ஓன்னரை வயசு இருக்குமா..?
நண்பி : ஆமா.. இப்பெல்லாம் ரொம்ப பேச ஆரம்பிச்சிட்டான் யா! என்கிட்ட இருந்து போனை புடிங்கி பேச ஆரம்பிச்சிட்டான்னா பாத்துகோயேன்..! இரு, அவன்கிட்ட தரேன்!
நானு : ஏய்யய்.. ஒரு நிமிஷ்ஷ்...
(போன் புடுங்கப்படுகிறது. கொஞ்ச நேரம் சத்தத்தையே காணும்..)

நண்பி (தூரத்திலிருந்து): எப்டி மாமா இருக்கீங்கன்னு கேளு!
பையன் : (சத்தமே போடல)
நண்பி (தூரத்திலிருந்து): கேளுடா!
(என் மனசு: "கொய்யால.. கேட்டு தொலடா! இல்லனா.. உடமாட்டா போலருக்கே!")
நண்பி (தூரத்திலிருந்து): கேளு .. மாமா எவ்வளவு நேரம் லையன்ல இருக்காரு பாரு!
பையன் : ..கா.. கொள.. க..
நானு : (இப்ப நான் சத்தமே போடல)நண்பி (தூரத்திலிருந்து): நீ எதாவது திருப்பி சொல்லு
நானு : டாய் குட்டி.. சாப்டியாபா? (கொஞ்சநேரம் அவனுடைய பாஷையில பேசிட்டு) o.k அம்மாகிட்ட குடு போனை..

(இந்த வசனத்தை சொல்லி 5 நிமிஷம் கழிச்சி நண்பி வந்தாங்க லையனுக்கு)நண்பி : ஹா.. ஹா..அவனுக்கு உன்னைய புடிச்சிருக்கு போல..
நானு : இதுமாதிரி பேசிகிட்டு இருந்தா சீக்கிரமா வார்தைகளை கத்துபான்!நண்பி : ஆமா.. ஆமா.. எ.பி.சி.டி எல்லாம் கூட சொல்லுவான்.
(திரும்ப என்னைய கேக்காமலேயே, அந்த பெரிய மனுஷன்கிட்ட போனை கொடுதுடுச்சு)
பையன் : (சத்தமே போடல)
நண்பி : (தூரத்திலிருந்து): எ.பி.சி.டி சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..நண்பி :
(தூரத்திலிருந்து): சூப்பரு.. ஈ.எப்.ஜி.எச் சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி (தூரத்திலிருந்து): வெரி குட்!!

அப்பாடா நல்வேளை.. இசட் வரைக்கும் போகாம ஒரு வழியா போனை வாங்கி, அவங்க வீட்டுகாரருக்கு வேலை விஷயமா கேக்க ஆரம்பிச்சி, நான் அடுத்த வாரம் இன்ஃபாரம் பண்றேன்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டேன்.
ஒரு பத்து நாள் கழித்து, அவளுடைய வீட்டுகாரர் வேலை சம்பந்தமான சர்ட்டிபிகேட் அட்டஷ்டேசன் குறித்து போன் பண்ணலாமுன்னு நினைச்சேன். அய்யோ.. உடனே அந்த நினைப்பை எச்சி தொட்டு அழிச்சிட்டு, chat பண்ணா தப்பிசி்டலாமுன்னு அறிவா(?) கணக்கு போட்டு, சாட்ங்குல அவளை பிடித்தேன்.

நானு : ஹாய்
நண்பி : Hang on, my son is all over the லேப்டாப்
நானு : ஓகே
நண்பி : He wants to say something to யு
நண்பி : .z..,zxcnv..a.,க்ஸ்

எனது நண்பனின் உண்மை சம்பவம் .........
NO LAWS NO LIMITS...& NEVER LOST (EXCEPT SOME)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக